புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறித்த சபையின் பொது முகாமையாளர் பியால் பத்மநாத குறிப்பிட்டார்.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நீர் கட்டண சீட்டு வழங்கும் இயந்திரம் மூலம் மாதாந்திர பில் தொகையை வழங்குவதுடன், வங்கி அட்டைகள் மூலம் நீர் கட்டணங்களை செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.