ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தலில் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் கை சின்னத்தில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், ஏனைய மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.