இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று வான்கடே மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்ப்பில் தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 163 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் அணித்தலைவர் 45 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் சிவம் மாவி 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.