வர்த்தக – கடல்சார் செயலகத்தின் பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள வர்த்தக மற்றும் கடல்சார் செயலகத்தின் பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று (10) முதல் ஜனவரி 12 ஆம் திகதி வரை அதன் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு சேவைகளைப் பெறுவதற்காக வர்த்தக கப்பல் போக்குவரத்து செயலக அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் கடல்சார் செயலகம், அந்த அலுவலகத்தின் ஆன்லைன் சேவைகள் அதே முறையில் பராமரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

வர்த்தக மற்றும் கடல்சார் செயலக அலுவலகங்கள் அவசர தேவை கருதி தற்போதைய கட்டிடத்தில் இருந்து வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.