மியன்டாட் லெஜன்ட் அணி அங்குராப்பணமும், புதிய சீருடை அறிமுகமும்

சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக்கழகத்தின் மற்றுமோர் அங்கமான மியன்டாட் லெஜன்ட் அணி   அங்குராப்பணமும், புதிய சீருடை அறிமுகமும், மூன்று போட்டிகள் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியும்  சாய்ந்தமருது  மல்ஹரியன் லெஜன்ட்  அணியினருக்கு எதிராக சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப்  வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் சாய்ந்தமருது மியன்டாட் லெஜன்ட் அணியினர் மூன்று போட்டியிலும் வெற்றிபேற்று கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டனர். இத்தொடரின் அதி கூடிய ஓட்டங்களைப்பெற்றவராக மியன்டாட் லெஜன்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யூ.எல்.எம். பாஹிம், அதிகூடிய விக்கெட்பெற்றவராக மியன்டாட் லெஜன்ட் அணியின் வீரர் எம்.ஏ. அஸ்தர் மற்றும் அதி கூடிய ஆறு ஓட்டங்களைப்பெற்றவராக மியன்டாட் லெஜன்ட் அணியின் எம்.ரி. பிர்தௌஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ. சம்சுதீன், கமு/கமு/எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய அதிபர் ஏ.எம். நாபித், உட்பட பலரும் கலந்து கொண்டனர்    

     நூருள் ஹுதா உமர்         

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.