ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு(TNA) இடையே இன்று(05) விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று(05) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இடையில் நேற்று(04) சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.