மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் மாட்டிறைச்சியின் விலை காட்சிப் படுத்தப்படாமல், நிர்ணயிக்கப்பட்ட விலை இன்றி அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் மன்னார் நகரசபைக்கு தெரியப்படுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை 1 ஆம் திகதி தொடக்கம் மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும் பள்ளிமுனை, பெரியகமம் மற்றும் சந்தை மாட்டிறைச்சி கடைகளில் ஒரு கிலோ தனி மாட்டிறைச்சியின் விலை 1500 ரூபாவும் முள்ளுடன் 1200 ரூபாவுக்கும் ஒரு கிலோ ஈரல் 2000 ரூபாவுக்கும் ஆட்டிறைச்சி 2600 ரூபாவுக்கும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் இறைச்சியின் விற்பனை விலை நுகர்வோருக்கு காட்சிப்படுத்து மாறும் குத்தகை காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு விற்பனை விலை காட்சிப் படுத்தாமல் அதி கூடிய விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டால் மன்னார் நகரசபை அலுவலகத்தில் நேரடியாக வோ தொலைபேசி ஊடாகவோ முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அனுமதியை மீறி அதிக விலைக்கு விற்பனையில் ஈடுபடும் குத்தகைதாரர்களின் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் மன்னார் நகர சபை அறிவித்துள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.