அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் வானில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.​

இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.​

கோல்ட் கோஸ்ட்டின் பிரதான கடற்கரைக்கு அருகில் உள்ள மணல் திட்டில் விமானங்களின் சிதைவுகள் வீழ்ந்ததுடன், இன்று (02) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.​

இவ்விபத்தின் போது இரண்டு விமானங்களிலும் 13 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும், 6 பேர் லேசான காயமடைந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.