பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் (IUSF) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் காலி வீதியை வந்தடைந்தவுடன் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட செயற்பாட்டாளருமான வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பல வீதிகள் தடைப்பட்டுள்ளன.

தும்முல்ல சந்தியில் இருந்து பௌத்தலோக மாவத்தைக்கு செல்லும் வீதியில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது நீர்த்தாரை, கண்ணீர் புகை பிரயோகம்...!

எவ்வாறாயினும், காலி முகத்திடலில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.