´லத்தீன் அமெரிக்காவில் இலங்கையை மேம்படுத்துதல்´ என்ற பெயரில் பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம் விளம்பரத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்கவினால், தீவு நாடான இலங்கையில் அடையாளம் காணக்கூடிய பன்முகத்தன்மை மற்றும் தனித்துவம் தொடர்பான விசேட தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்து குறிப்பாகக் குறிப்பிட்டுள்ள தூதுவர் சுமித் தசநாயக்க, வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறையில் பிரேசில் மற்றும் தென் அமெரிக்கர்களுக்கு இலங்கையில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
கருத்துரையிடுக
0கருத்துகள்
3/related/default