(சுஐப்,எம்,காசிம்)

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட கட்சி சார்பாக முன்வந்துள்ளவர்கள் மற்றும் சுயேச்சைகளில் களமிறங்கியோரை கவனிக்கையில்,கல்விச் சமூகம் அரசியலிலிலருந்து தூரமாகியுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. அரசியலின் சுயநலப் போக்குகளும்,எதையும் சாதிக்க இயலாத பலவீனங்களையும் புரிந்துகொண்டதால்தான்,இந்நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.கடைசி நேரம் வரைக்கும் கல்விமான்கள் மற்றும் சமூக முன்னோடிகளை தேர்தலில் நிறுத்தும் கட்சித் தலைமகளின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன.நாடு பூராகவும் நிறுத்தப்பட்டுள்ள இந்த வேட்பாளர்கள் எந்தளவில் ஊரின் முன்னேற்றத்துக்கு உழைக்க முடியும்.ஊரின் தேவைகளுக்கான அடிமட்ட முயற்சியிலிருந்துதான்,சமூக சிந்தனைகள் வளப்படுவதுண்டு.



இதனால்,பொதுவாக இந்த உள்ளூராட்சித் தேர்தல் சமூகத்தில் வளர்ந்து பொதுத் தொண்டனாக ஒருவனைப் பக்குவப்படுத்தும் பயிற்சிக்களமாகவே பார்க்கப்படுகிறது.இம்முறை, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இந்தளவு மோசமான நிலைமைகள் ஏற்பட்டதற்கு தலைமைத்துவப் பண்புகள் சீரழிந்துள்ளதே பிரதான காரணம்.இந்தச் சீரழிவு பல கட்சிகளைத் தோற்றுவித்து,பல கிளைகளை வளர்த்தது.இதனால்,போட்டியிட முன்வந்துள்ள வேட்பாளர்களை அவதானிக்கும் மக்கள், வாக்களிப்பிலிருந்து விலகி,அரசியல் களத்தை நகைப்புக்கிடமாக நோக்குகின்றனர்.இது,ஒவ்வொரு ஊர்களிலுமுள்ள சந்திகள், கடைகள்,பொதுக் களங்களின் பேசுபொருளாகவும்,விமர்சனப் பார்வைகளாகவும் அமைந்துள்ளன.சமூகத்தின் அடிமட்டக் கோட்பாடுகளுக்குப் பயிற்சியளிக்கும் உள்ளூராட்சித் தேர்தல்கள் இந்தளவு மலினப்பட்டுள்ளமை சமூக ஆர்வலர்களை கவலைக்குட்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.