இலங்கை செஸ் சம்மேளன சம்பியன்ஷிப் போட்டியில் மாளிகைக்காடு சபீனா மாணவர்கள் வெற்றி !

மாளிகைக்காடு நிருபர்

தேசிய இளைஞர் சதுரங்க போட்டியில் கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவன் எம்.எச்.எம். ருஸைக் 12 வயது பிரிவில் இரண்டாம் இடத்தையும்,  என். ஷராப் அஹமட் 12 வயது பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

“இலங்கை செஸ் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்” அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கான (ஆண், பெண்) செஸ் சம்பியன்ஷிப் போட்டியானது இம் மாதம் 28, 29 (சனி, ஞாயிறு) திகதிகளில் சாய்ந்தமருது அல் ஹிலால் பாடசாலையில் நடைபெற்றது. இதில் 12 வயது பிரிவின் கீழ் விளையாடி இவர்கள் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

இந்த வெற்றிக்காக உழைத்த பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எம். இர்ஷாத் உட்பட இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் தேசிய ரீதியில் விளையாடக் கூடிய வாய்ப்பையும், சர்வதேசமட்டத்தில் விளையாடக் கூடிய வாய்ப்பையும்  பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.