கலாநிதி நஜீப் ஹாஜியார் கலாசார மண்டப திறப்பு விழா தர்கா நகர் நஜீப்‌ ஹாஜியார் கல்வி நிலைய ஸ்தாபகர் தேசமான்ய கலாநிதி நஜீப் பின்‌ அமீர் ஆலிமின்‌ நிதியுதவியுடன் தர்கா நகர் அளுத்கம வீதிய முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலையில் சுமார் 50 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டப திறப்பு விழா நேற்று 26ம் திகதி (26-1-2023) வியாழக்கிழமை மிக விமர்சையாக நடைபெற்றது.

அதிபர் பி.எம்.எம்.ஜாபிர்‌ தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் கலாநிதி நஜீப் ஹாஜியார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்‌. பேருவளை கெச்சிமலை அல்-அஷ்ரபியா அரபுக் கல்லூரி முதல்வரும் தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரி முன்னாள் உப தலைவருமான மௌலவி எம்.ஆர்.எம்.ஸில்மி(நூரி-அல்-அஸ்ஹரி) விசேட சொற்பொழிவு நிகழ்த்தினார்.

பாடசாலையின் முன்னாள் அதிபர்களான ஏ.ஏ.எம்.பாயிஸ், முஹம்மத் ஹம்ஸா,தர்கா நகர் இஸ்லாமிய நலன்புரிச் சங்க தலைவர் ஏ.பி.எம்.ஸுனஹா ஹாஜியார் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.நபீல்,பைஸான் நைஸர்,எம்.ருஷ்தி,ஹசீப் மரிக்கார், எம்.ரியாஸ் முன்னாள் பிரதேச சபை உபதலைவர் எம்.எச்.எம்.ஹுஸைமத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் அமைக்கப்பட்டுள்ள இக் கட்டிடத்திற்கு "கலாநிதி நஜீப் ஹாஜியார் கலாசார மண்டபம்" என பெயரிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவிகள்,ஆசிரியர்கள்,அதிபர் உட்பட ஊழியர்களுக்கு இக் கலாசார மண்டபத்தின் மூலம் தமது சமய கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு கிட்டுகிறது.இதன் மூலம் பாடசாலையின் முக்கிய தேவையொன்று நிறைவேற்றப்படுகிறது.

நஜீப் ஹாஜியார் கல்வி நிலையமானது தர்கா நகர் பகுதியில் கல்வி மற்றும் ஆன்மீக கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பாரிய வேலைத்திட்டங்களை கடந்த 15 வருடங்களாக முன்னெடுத்துள்ளது.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.