பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பணவீக்கம் குறைவடைந்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தேசிய நுகர்வோர் சுட்டெணில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் 65 தசவீதமாக காணப்பட்ட பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் 59.2 சதவீதம் வரை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 8 மாதங்களாக கடுமையான நிதிக் கொள்கையை அமுல்படுத்திய போதிலும் இந்த நாட்டில் பணவீக்கத்தை எதிர்பார்த்த அளவு குறைக்க முடியவில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நாட்டில் நல்லதொரு பொருளாதார நிலைமை ஏற்பட வேண்டுமானால், டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் பணவீக்கம் குறைந்தது 20 சதவீதமாவது ஆகவேண்டும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டினார்.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, கடந்த நவம்பரில் 65 சதவீதமாக பதிவான பணவீக்கம் டிசம்பரில் 59.2 சதவீதமாக குறைந்துள்ளது.

எவ்வாறாயினும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மதிப்பில் மாற்றம் ஏற்படவில்லை என பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் சுட்டிக்காட்டினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.