அரச ஊழியர் உறுதிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தாண்டின் இலக்குகளை அடைய அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டில் செயற்பட்டதை போன்றல்லாது புதிய ஆண்டிற்கான இலக்குகளை அடைய புதிய மாதிரியை நோக்கி செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

புத்தாண்டு கடமைகளை ஆரம்பிப்பதற்காக பத்தரமுல்ல, சுஹூருபாயவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (2) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டுட போதே அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

 இந்த புத்தாண்டிலும் அரசு அறிவித்த உறுதிமொழியை ஏற்று செயல்பட ஆரம்பித்தோம். அரசு ஊழியர்களாகிய நாம் இந்த உறுதிமொழியை இன்று மட்டுமின்றி மீதமுள்ள முந்நூற்று அறுபத்து நான்கு நாட்களிலும் செயல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டின் தொடக்கத்தில், எங்களுக்கு இவ்வளவு சவால்கள் இல்லை. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசுக்கும் மக்களுக்கும் நிறைவேற்ற வேண்டிய பெரிய பொறுப்பு உள்ளது.

எனவே, அரசு ஊழியர் உறுதிமொழியின் ஒவ்வொரு வார்த்தையும் இந்த ஆண்டு முழுவதும் நம் இதயத்தில் நிலைத்திருக்க வேண்டும். பொதுச் சேவை செய்வதற்காக மக்களின் பணமே பெறுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், சம்பளம் வாங்கும் அளவுக்கு மாத்திரமே வேலை செய்ய நினைக்க கூடாது.
இந்த ஆண்டு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிகள் புதிய வடிவத்தில் செயல்படுத்தப்பட வேண்டும். எனவே, கடந்த ஆண்டு வேலை செய்த மாதிரியை இந்த ஆண்டு ஓரளவுக்கு அகற்ற வேண்டும். நிர்வாக சேவைகள் திணைக்களத்திற்கான புதிய நிறுவன கட்டமைப்பை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். அரசாங்கமும் திறைசேரியும் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, நிர்வாக சேவைகள் திணைக்களம் அடுத்த சில நாட்களில் ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கும். எதிர்காலத்தில், அவர்கள் தங்கள் பொறுப்புகளை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்வார்கள். அதற்கிணங்க, அரசாங்கத்தின் இறுதி இலக்கை வெற்றிகொள்ள கடுமையாக உழைக்க வேண்டும்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இருவரிடமிருந்தும் பெறப்பட்ட அறிவுறுத்தலின்படி, வருடத்தில் 365 நாட்களும் பொதுமக்களின் கண்ணீரை துடைக்க உழைக்க உறுதி பூண்டுள்ளோம். பொதுமக்களுக்காக வேலை செய்யும் போது, சில சமயங்களில் அவர்களுக்கு நாம் செய்வது மிகச் சிறிய பணியாக இருக்கலாம். அரசு ஊழியர்களாகிய நாங்கள் அந்தச் சிறு பணியை சரியான நேரத்தில் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

அரச ஊழியர்களாகிய நாம் நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கு அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கொள்கைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம். எனவே

புத்தாண்டின் தொடக்கத்தில் நீங்கள் கூறிய உறுதிமொழியை மீண்டும் படிக்கவும். பொது சேவையை வலுப்படுத்த உங்கள் ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் அறிவையும் பயன்படுத்தவும். இவ்வாறான விடயங்களை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்கு செயலாளர் என்ற வகையில் நான் செயற்படுகின்றேன்.

இந்த வருடம் அமைச்சுக்களின் செயலாளர்கள் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும். அமைச்சுச் செயலாளர்களுக்கு குறிப்பிட்ட இலக்கின்படி பணியாற்றக்கூடிய வகையில் பணி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் நியமனம் ஏற்றுக்கொள்ளும் தினத்தில் ஜனாதிபதி செயலாளரிடம் தெரிவித்தேன். அமைச்சின் செயலாளர் என்ற வகையில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணிகளுக்கும் இறுதியில் நான் பொறுப்பாவேன். இலக்கின்படி வேலை செய்ய முடியாவிட்டால் பொருத்தமானவர்களுக்கு இடம் கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.