ஜெலி மீன் தாக்கியதையடுத்து சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த அல்ஜின் ஜெனிராஜ் (வயது 52) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இவர், பண்ணைக் கடற்கரையில் இறால் பிடிப்பதற்காக கடந்த செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி சென்றுள்ளார். இதன்போது அவர் ஜெலி மீனால் தாக்கப்பட்டுள்ளார்.


இதனையடுத்து தொடர்ந்து 20 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.


வீட்டிலும் உடல்நிலை முழுமையாகக் குணமடையாமல் வேலைக்குச் செல்லாமல் ஓய்வில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த நிலையில் அவர் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்துள்ளார். இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.