பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம்!

தொடர்சசியாக பணவீக்கம் வீழச்சி அடைவதற்கு 3 விடயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் பொருளாதார பகுப்பாய்வுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் கலாநிதி எல்.ஆர்.சி. பத்பேரிய தெரிவித்தார்.

மொத்த கோரிக்கை குறைந்தமை இந்த விடயங்களில் முக்கியமானதாகும். இந்த வருடத்தில் பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடனுக்கான வட்டி வீதங்களும் குறைவடைய கூடியதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். வட்டி வீதம் அதிகரிப்பின் காரணமாக வர்த்தக நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மத்தியில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைறைச்சேர்ந்தவர்களின் வட்டி வீதங்களை குறைக்க முடியாதா? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு மத்திய வங்கி ஆளுநர் பதிலளிக்கையில், வட்டி வீதங்களை குறைக்க வேண்டுமாயின் பண வீக்கத்தை குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொள்கை ரீதியிலான வட்டி வீதத்தில் எந்த வித மாற்றமும் இன்றி முன்னெடுப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக நிலையான வைப்பீட்டுக்கு 14.5 வீதமும், நிலையான கடன் வசதிக்கு 15.5 வீத வட்டி முன்னெடுக்கப்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையின் பணவீக்கம் 2022 ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து 65 சதவீதத்திலிருந்து 2022 டிசம்பரில் 59.2 சதவீதமாக மேலும் குறைந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.