கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாத்தியாகம பகுதியில் புதையல் தோண்டிய மூவரை (16) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் உரிமையாளர் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதையல் தோணடுவதாக கந்தளாய் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது வீட்டின் சமையலறை பகுதியில் இருபது அடிவரை தோண்டிக்கொண்டிருந்த போதே மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்த ஒருவர் இந்த இடத்தில் புதையல் இருப்பதாக கனவில் வந்து கூறியதாக தெரிவித்ததை அடுத்தே அந்த இடத்தில் தோண்டியதாக கூறப்படுகின்றது.

இதற்கு முன்னரும் அந்த வீட்டில் புதையல் தோண்டிய போது ஐந்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் மீண்டும் அந்த இடத்தில் புதையல் தோண்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புதையல் தோண்டிய இடத்தில் பெரிய இரும்பு சங்கிலி, தண்ணீர் இறைக்கும் மோட்டார், இரும்புக் கூர், தடுப்பு பொருட்கள் உட்பட பல இரும்பு பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.