நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரமொன்று மீண்டும் இன்று (08) முதல் மின் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை மற்றும் புதுப்பிப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த 23ஆம் திகதி நிறுத்திவைக்கப்பட்ட குறித்த இயந்திரத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், தற்போது மீண்டும் நிலக்கரி கையிருப்பு இருப்பதன் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக மின்சாரசபை அறிவித்துள்ளது.
இதுவரையில் தலா 60,000 மெற்றிக்தொன் நிலக்கரியுடன் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. மேலும் ஒரு கப்பலிலிருந்து நிலக்கரி இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.