மெஸி மற்றும் ரொனால்டோ மோதும் போட்டி

கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களான மெஸி மற்றும் ரொனால்டோ சினேகபூர்வ கால்பந்தாட்ட போட்டியொன்றில் மோதவுள்ளார்கள்.

சவூதி அரேபியாவின் தலைநகர் றியாத்தில் எதிர்வரும் ஜனவரி 19 ஆம் திகதி சினேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டி நடைபெறவுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கம் வகிக்கும் சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகம், அல் நாசரின் பிரதான சவூதி போட்டியாளரான அல் ஹிலால் கழகமும் கூட்டாக இணைந்து லயனல் மெஸி அங்கம் வகிக்கும் பிரெஞ்சு கழகமான பாரிஸ் செயின்ற் ஜேர்மைன் கழகத்துடன் சினேகபூர்வ போட்டியொன்றில் மோதவுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் அண்மையில் இணைந்து கெண்டுள்ளதுடன், அவரின் ஊதியமாக வருடாந்தம் 200 மில்லியன் யூரோ வழங்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.