யாழில் தாய்ப் பால் புரைக்கேறி30 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.


புத்தூர் நவக்கரி, மாதா கோவிலடியை சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.


சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,


தாயிடம் பாலருந்திய போது திடீரென புரக்கேரியது இதனை அடுத்து அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை உயிழந்துள்ளது.


குழந்தையின் உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இன்று (ஜன 28) 31 ஆம் நாள் நிகழ்வுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த வேளையில் குழந்தையின் இறப்புச் சம்பவம் அவர்களது குடும்பத்தை பாரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.