சேலம் மாவட்டம் ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முதன் முறையாக மது அருந்திய இளைஞர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மல்லூர் வேங்கம்பட்டியைச் சேர்ந்த அண்ணாமலையின் மகன் சந்தோஷ் (23). இவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நேற்று மதியம் 3 மணி அளவில் தனது நண்பர்கள் 10 பேருடன் ஏற்காடு வந்துள்ளனர்.

ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி, நேற்று இரவு சந்தோஷ் உட்பட அனைவரும் மது அருந்தி புத்தாண்டை கொண்டாடி உள்ளனர்.

அப்போது சந்தோஷ்சிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் உடனிருந்தவர்கள் சந்தோஷை ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சந்தோஷை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஏற்காடு பொலிசார் சந்தோஷின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.​

இறந்து போன சந்தோஷிற்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளதாகவும் மேலும் அவர் நேற்று தான் முதன்முதலாக மது அருந்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.