நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தை காண நேற்று இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளை சூழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் திரையரங்கின் முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடியபோது கீழே விழுந்து உயிரிழந்தார். முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.