மாத்தறை கடற்கரையில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நான்கு பேர் நீராடச் சென்றதாகவும் அதில் இருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து மேலதிக வகுப்புகளில் கலந்து கொள்வதாக கூறி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துரையிடுக
0கருத்துகள்
3/related/default