இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதை ஒத்திவைக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

குறித்த கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொவிட்-19 நோய் தொடர்பான தொடர் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நேற்று (13) நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் அதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கவில்லை.

இதேவேளை, இந்த வருடத்தின் முதல் 12 நாட்களுக்குள் 37,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக பிரியந்த பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.