இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 4 போ் மீது கனடா தடை விதித்துள்ளது.
மேலும், ராணுவ அதிகாரியான சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படை அதிகாரியான ஹெட்டியராச்சி ஆகியோா் மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், அவா்கள் 4 பேரும் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், அவா்களுடனான நிதிப் பரிமாற்றம் மற்றும் பிற சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.