ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை ஐசிசி அறிவித்தது.
அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த தொடரில் ஹாரி புரூக் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி 3 சதம் மற்றும் 1 அரைசதம் குவித்து அசத்தினார். 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ஹாரி புரூக் ஐதராபாத் அணியால் 13.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை அவுஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் கைப்பற்றி உள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.