மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். 

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என நியூஸ்பெஸ்ட் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். 

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நேற்று(09) அனுமதி கிடைத்ததாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார்.

பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் மீள் பரிசீலனை செய்யும் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீள் பரிசீலனையின் போது மீண்டும் மின் கட்டணம் குறைவடைவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனை நேற்று(09) பிற்பகல் தமக்கு கிடைத்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.