மின் கட்டணம் செலுத்தவில்லை : துண்டிக்கப்பட்டது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்சாரம்!

TestingRikas
By -
0

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்  மின்சார கட்டணத்தை நவம்பர் மாதம் செலுத்தாத காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

55 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான கட்டணத்தொகை செலுத்தப்படாததால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் ஜெனரேட்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3220 லீற்றர் டீசல் தேவைப்படுவதாகவும் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)