உர மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா உரங்களில் புழுக்கள் காணப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் உர மானியத்தின் கீழ் பெறப்பட்ட யூரியா உரத்தில் புழுக்கள் இருப்பதாக மகாவலி பி பிராந்தியத்தின் திம்புலாகல மனம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி மனம்பிட்டிய விவசாய சேவை நிலைய அதிகாரிகளும் இதனை பரிசோதிக்க சென்றுள்ளனர்.
பின்னர், உர மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக விவசாய திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
எனினும், யூரியா அமோனியா நிறைந்த இரசாயன உரம் என்றும், அதில் எந்த உயிரினமும் வாழ முடியாது என்றும் தேசிய உர செயலகம் கூறியுள்ளது
கருத்துரையிடுக
0கருத்துகள்
3/related/default