பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது அரச சேவையில் இருக்கும் பட்டதாரிகளே இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும், அது தொடர்பான விண்ணப்பங்களை applications.doenets.lk/exams என்ற இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.