கல்முனை மாநகர சபையிலிருந்து, மருதமுனை மக்கள் பிரிந்துபோக நினைப்பது காலத்தின் கட்டாயமா?


தகுதியற்ற தலைவர்களால் தேசம் அழிந்து போவதால் தகுதியற்றவர்களை தேர்வு செய்த மக்களே கைசேதப் படுகின்றனர் என மாற்றத்திற்கான முன்னணி செயற்பாட்டாளர் சட்டத்தரணி றயிசூல் ஹாதி தெரிவித்தார்.


இன்று அவர் ஊடகங்களுக்கு  அனுப்பி வைத்துள்ள உள்ளுராட்சி தேர்தல் தொடர்பிலான செய்திக்குறிப்பு ஒன்றில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது 



தமக்கான அரசியலை நாங்கள் பேசாதிருந்தால் வெறுக்கும் அரசியலால் அடிமைகளாக ஆளப்படுவோம். மருதமுனை மக்கள் கட்சியரசியலை மறந்து ஒற்றுமைப்பட்டு சுயாதீனமான அரசியலதிகாரத்தைப் பெற்றேயாக வேண்டும். 4 பேர் வாழ்வாதாரமாக 10 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றதைத் தவிர கண்டது எதுவுமேயில்லை. எங்களுடைய வரிப்பணத்தினால் மாநகர ஆணையாளரும் ஊழியர்களும் பல்பினையும், வடிகானை துப்பரவாக்குவதையும், கழிவு அகற்றுவதையும் வியாபார அனுமதிப்பத்திரம் வழங்குவதையும் செய்யலாம்.



நமது மருதமுனைக்கு ஏன் நகர சபை அவசியம்?அதனால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்? என்பவற்றை அபிவிருத்திகள் உள்ளூராட்சி சபைகளை மையப்படுத்தி இடம்பெறுகின்ற போது கண்டு கொள்ளலாம். சபை ஒன்று இல்லாமல் இருப்பது எமது ஊருக்கு எவ்வளவு இழப்பும், அநீதியும் என்பது வெள்ளிடைமலை.



சாயந்தமருதுக்கு தனியான எல்லை நிர்ணயம் உள்ளதால் மீதமாகவுள்ள பிரதேசத்தை 1987க்கு முன்பிருந்தவாறு எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டு கரைவாகு வடக்கு கிராம சபை, கல்முனை பட்டின சபை, கரைவாகு மேற்கு கிராம சபை போன்ற உள்ளூராட்சி சபைகளையும், பொது நிர்வாகத்தையும் பிரிப்பது பொருத்தமான ஜனநாயகமாகும்.



கல்முனை எதிர்காலத்தில் எதிர் நோக்கும் பிரச்சினையிலிருந்து விடுபட முஸ்லிம் தமிழ் கட்சித் தலைவர்கள் பேச வேண்டும். அதிகாரத்தினால் அடக்கியாள நினைப்பவனை என்றோ ஒரு நாள் மக்கள் கூட்டம் விரட்டியடிக்கும் ஊழல் நிறைந்த அபிவிருத்தி காணாத கல்முனை மாநகரசபையிலிருந்து மருதமுனை மக்கள் பிரிந்துபோக நினைப்பது காலத்தின் கட்டாயமாகும்.



 தகுதியற்ற தலைவர்களால் தேசம் அழிந்து போவதால் தகுதியற்றவர்களை தேர்வு செய்த மக்களே கைசேதப் படுகின்றனர். கட்சிகளின் சூட்சுமங்களை மறந்து மருதமுனை தனியாக எழுச்சிபெற்றுவிடக் கூடாது என்ற அரசியல் விபச்சாரிகளினதும், அற்ப சிந்தனையுள்ள சிலரினதும் நரித்தந்திரங்களுக்குள் கட்டுண்டு விடாமல் நகரசபையை வென்றெடுப்போம்.



இது தொடர்பிலான கோரிக்கைப் பிரதிகள் அதாவுல்லாஹ், ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன், அரசாங் ஆதிபர் போன்றவர்களிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளது. மருதூர்கனி, மசூர்மௌலான, துல்ஷான் போன்ற ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் தவறேதுமில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.