நுவரெலியா மாநகர சபையின் புது வருடத்துக்கான அலுவலக பணிகள் ஆரம்பம் 

பிறந்துள்ள 2023 புதுவருடத்தை முன்னிட்டு நுவரெலியா மாநகர சபையின் புது வருடத்திற்கான அலுவலக பணிகள் ஆரம்ப நிகழ்வு மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன தலைமையில் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக மாநகர முதல்வரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு , மாநகர ஊழியர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து  அலுவலுகப் பணிகளுக்கான உறுதிமொழி வாசிக்கப்பட்டு ஊழியர்களால் உறுதி மொழி எடுக்கப்பட்டது.இதன் பின்னர் வழமை போல் அலுவலுகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது

இவ் நிகழ்விற்கு மாநகர சபை முதல்வர் ,ஆணையாளர்,மாநகர சபையின் உறுப்பினர்கள் ,மற்றும் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நானுஓயா நிருபர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.