நுவரெலியா, நானுஓயா, ரதெல்ல பிரதேசத்தில் நேற்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (20) பிற்பகல் பேருந்து, வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, தர்ஸ்டன் கல்லூரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி கல்வி சுற்றுலா சென்று கொண்டிருந்த பேரூந்தே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்திற்குப் பிறகு, பேருந்து சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தில் வீழ்ந்துள்ளது
அங்கு 41 பாடசாலை மாணவர்கள் உட்பட 53 பேர் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 08 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளும் 13 வயதுடைய சிறுவனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் 26 மற்றும் 27 வயதுடைய மூன்று ஆண்களும் 43 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குகின்றனர்.
இவர்கள் ஹட்டன் நானுஓயா பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.
இதேவேளை விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
தேவை ஏற்பட்டால் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதன் பிரகாரம் எம்ஐ 17 ரக ஹெலிகொப்டரை ரத்மலானை விமானப்படை தளத்தில் விமானப்படை தயார் செய்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அதிபர், பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்களை சந்தித்து எதிர்வரும் நடவடிக்கைகள் குறித்து நேற்று இரவு பாடசாலையில் கலந்துரையாடியதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அதன்படி நேற்று இரவு நுவரெலியா வைத்தியசாலைக்கு இரண்டு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன