காலி வீதி, வெலிகம, கப்பரதொட்ட பாலத்திற்கு அருகில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீதியில் பயணித்த தாய் மற்றும் மகனுடன் மோதியதில் தாய் உயிரிழந்துள்ளார்.

கிரலவெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகம பஸ் நிலையத்தில் இருந்து பேருந்தில் ஏறிய நான்கு பேர் பேருந்தின் நடத்துனருடன் ஏற்பட்ட சண்டை தீவிரமடைந்ததை அடுத்து பேருந்தின் சாரதியையும் தாக்கியுள்ளனர்.

இதன்போது, ​​சாரதி இருக்கையில் இருந்து தவறி விழுந்ததால் பேருந்து சாலையை விட்டு விலகியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.