பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தொடர்ந்து 6 வது முறையாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
சுமார் 106 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், அஷீம் முதலிடம், விக்ரமன் இரண்டாமிடம், சிவின் மூன்றாமிடம் பெற்றனர்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதி நிகழ்விலும் பங்கேற்று அந்த வாரம் நடைபெற்ற சம்பவத்தை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 15 வார இறுதி நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு, ஒரு நிகழ்வுக்கு ரூ. 5 கோடி வீதம் மொத்தம் ரூ. 75 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டை காட்டிலும் ரூ. 20 கோடி இந்த சீசனுக்கு அதிக சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.