வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஜனவரி 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியாவின் இளவரசரும் வௌியுறவு அமைச்சருமான  Faisal bin Farhan Al Saud-இன் அழைப்பை ஏற்று அமைச்சர் அலி சப்ரி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். 

அமைச்சர் அலி சப்ரி இந்த விஜயத்தின் போது சவுதி அரேபியாவின் வௌியுறவு அமைச்சர் Faisal bin Farhan Al Saud-ஐ சந்திக்கவுள்ளதுடன், இருதரப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் வகையில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்​கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.