இவ்வாரத்திற்கான அமைச்சரவை கூட்டம் இன்று (02) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் அமைச்சரவை கூடவுள்ளது.
முட்டைகளை இறக்குமதி செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்றைய அமைச்சரவையில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அமைச்சரவையில் முட்டை விலையை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ “அத தெரண” செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, மின்சார கட்டணத்தை 65 வீதத்தால் அதிகரிப்பதற்கான பிரேரணையும் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் குறித்த பிரேரணை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் ஊடாக ஒரு அலகு மின்சாரத்துக்கு விதிக்கப்படும் கட்டணம் மற்றும் நிலையான கட்டணத்தையும் அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.
இதேவேளை, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்யும் சதித்திட்டத்தை குருநாகலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வெளிப்படுத்தினார்
கருத்துரையிடுக
0கருத்துகள்
3/related/default