கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஏ.எம் .எம் அஸ்மிர் அவர்கள் நேற்றைய தினம் (20) பதவியேற்றார்.

திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் சுமார் ஆறு வருடங்கள் அதிபராக சிறப்பாக கடமையாற்றிய அவர் இடமாற்றம் கோரியிருந்த நிலையில் கஹட்டோவிட்ட அல் பத்ரியாவில் காணப்பட்ட அதிபர் வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக அல் பத்ரியாவின் பாடசாலை அபிவிருத்தி சங்க  நிறைவேற்றுக் குழுவினர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள்  மேற்கொண்ட முயற்சியின் பலனாகவும்  அஸ்மிர் அதிபரின் இணக்கப்பாட்டின் அடிப்படையிலும் ,
மேற்படி அதிபர் வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஜனாப் எம்.ஏ.எம் அஸ்மிர் அவர்கள் நேற்றைய தினம் இரவு அல் பத்ரியா மகா வித்தியாலய அதிபர் காரியாலயத்தில் வைத்து பதவி ஏற்று கையொப்பத்தை இட்டுள்ளார்.

 மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட வலய மட்ட தமிழ் மொழி மூல பணிப்பாளர் ஜனாப் தௌஸீர் அவர்கள் உரைநிகழ்த்துவதையும் முன்னால் தேர்தல் ஆணையாளரும் தற்போதைய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினருமாகிய ஜனாப் எம் எம் மொஹம்மட் அவர்கள் பிரதேச வாதம் கொண்டு இடமாற்றங்களை நோக்காது  பாடசாலை அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் கருதியே இவ்விடயம் நோக்கப்பட வேண்டும் ,  பாடசாலை நிர்வாகம்  சிறப்பாக முன்னே கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதையும் அதிபரின் பணியை நிர்வாகத்தை சுதந்திரமாக செய்ய அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்றும் பாடசாலை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கே நிறைவேற்று குழு அதிபருடன் சேர்ந்து தலையீடு செய்ய வேண்டுமே தவிர நிர்வாக விடயத்தில் தலையிடக்கூடாது என்பதை  வலியுறுத்தும் விதமாகவும் உரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் அதுவரை அதிபர் பதவியை பொறுப்பேற்று வந்த ஸலீஹா  அதிபர் அவர்கள் புதிதாக பதவியேற்றுள்ள அஸ்மிர் அதிபர் அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன்  தமது பொறுப்புக்களையும் நேற்றைய தினம் புதிய அதிபரிடம் கையளித்தார்.

  நேற்றைய இந்நிகழ்வில் அதிபர் ஸலீஹா உட்பட பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள்,திஹாரிய அல் அஸ்ஹர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் என பலரும் இந்த பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நியமனம் பெற்று சேவையாற்ற களமிறங்கியிருக்கும் அதிபர் அவர்களுக்கு சியன மீடியா சேர்கிள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.