அக்கரைப்பற்று ஆலிம் நகரில் புதிய பள்ளிவாசலொன்று திறந்து வைக்கப்பட்டது.

மனாருல் ஹுதா, அவரது சொந்த செலவில் இதை நிர்மாணித்துள்ளார். பள்ளிவாசல் என்பது தொழுவதற்கான இடம் மட்டுமல்ல, அது பல்வேறு செயற்பாடுகளுக்கான பொதுத் தளம் என்ற புரிதலோடுதான் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்போது உலமா சபைத் தலைவர் எம்.எம்.அப்துல் லத்தீப் ஹஸரத் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார் (நளீமி), கலாநிதி சித்தீக் ஹாபிஸ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

இந்த ஆரம்ப நிகழ்வில் பெண்களும் சிறுவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஊர் மக்களுக்கும் அழைக்கப்பட்டோருக்கும் பகலுணவும் வழங்கப்படது.

பயணிகள் இங்கு தொழலாம். முன்னே இருக்கும் பகுதியில் ஓய்வாக அமர்ந்து இருக்கும் வகையில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

குறிப்பாக மாணவர்கள் சுய கற்றலில் ஈடுபடும் ஏற்பாடு பற்றியும், விளையாட்டு வசதிகள், நூலகம், அருங்காட்சியகம் பற்றியெல்லாம் பிரஸ்தாபிக்கப்பட்டது.

படிப்படியாக ஏனைய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இதன் பணிப்பாளர் மனார் குறிப்பிட்டார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.