தமிழகத்திற்கு வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிர்வாகிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தலைமை அலுவலகத்தில் வரவேற்பு

தமிழகத்திற்கு வருகை தந்த  ஸ்ரீலங்காமுஸ்லிம் மீடியா போரத்தின் நிர்வாகிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்ரீலங்காமுஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவரும், மூத்த ஊடகவியலாளருமான என்.எம். ஆமீன், போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் ஆகியோர் தலைமையில் என்.ஏ.எம். ஸாதிக் ஷிஹான், ஜாவித் முனவ்வர், மௌலவி எஸ். எம்.எம். முஸ்தபா, தாஜா முஸம்மில்,  எம் எம் ஜெஸ்மின், எம். எஸ்.எம்.  ஸாஹிர்,எம். ஐ. நிஸாம்தீன், நஸ்லிமா அமீன்,புர்கான் பானு, ஷிஹாரா ஷிஹான் , என் எம் ஸமீஹா, ஸெய்னப் சீனத் ஷிமாஸ் எம் சபீர் உள்ளிட்ட 15 பேர்கள் தமிழகத்திற்கு சுற்றுலா மற்றும் புத்தக கண்காட்சிக்கு 12.01.2023 வியாழக்கிழமை இலங்கையில் இருந்து சென்னைக்கு வருகை தந்தார்கள். 

அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் 12.01.2023 வியாழக்கிழமை மதியம் அவர்களுக்கு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அனைவரையும் வரவேற்று முஸ்லிம் மீடியா போரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். 


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிர்வாகிகள் மற்றும் மூத்த ஊடகவியலாளர் என்.எம். ஆமீன் ஆகியோர் பற்றிய செயல்பாடு குறித்து விளக்கி பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில செயலாளர்கள் காயல் மகபூப், கே.எம். நிஜாம்தீன், மாநில துணைச் செயலாளர் ஆப்பனூர் ஜபருல்லாஹ், ஜ‌டி‌ விங் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சல்மான் முஹம்மது, துணை ஒருங்கிணைப்பாளர் கோப்பை நிஜாம்தீன், மாவட்ட தலைவர் டாக்டர் மடுவை பீர் முஹம்மது, மாவட்ட தலைவர் கமுதி சம்சுதீன், எம்.எஸ்.எப். தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அர்ஷாத், மணிச்சுடர் ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். 

தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவுரை பேரில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் , ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் ஒருங்கிணைப்பு டன் ஸ்ரீலங்காமுஸ்லிம் மீடியா போரத்தின் நிர்வாகிகள் தமிழகத்தில் காயல் பட்டினம், இராமநாதபுரம், குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் சுற்றி பார்ப்பதற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.