அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நுாற்றாண்டு விழா இன்று உலமா சபைத் தலைவா் மௌலவி அஷ்ஷேக் எம்.ஜ.றிஸ்வி முப்தியின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகும் கௌரவ அதிதியாக பிரதம மந்திரி தினேஸ் குணவர்த்தனவும், பிரதம பேச்சளராக தென் ஆபிரிக்க உலமா சபை தலைவா் மௌலானா இப்றாஹீம் பாஹ்ம் கலந்து கொள்ளவுள்ளனா்.

நுாற்றாண்டை முன்னிட்டு விசேட முத்திரை வெளியிடப்பட இருப்பதோடு முதல் முத்திரையை ஜனாதிபதி வெளியீட்டு வைப்பாா்.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை இலங்கை நாட்டில் முஸ்­லிம்­களின் சன்­மார்க்கத் தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்­காக கடந்த 1924 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட ஓர் உயர்ந்த சிவில் அமைப்­பாகும்.

2000 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க சட்­டத்தின் பிர­காரம் இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் பாரா­ளு­மன்­றத்தில் ஜம்­இய்யா கூட்­டி­ணைக்­கப்­பட்­டுள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் 24 மாவட்டங்களிலும் பிர­தேசக் கிளைகள் என 164 கிளைகள் உள்­ளன.

8000 க்கும் மேற்­பட்ட ஆலிம்கள் தற்­போது ஜம்­இய்­யாவில் அங்கம் வகிக்­கின்­றனர்.

ஜம்­இய்­யதுல் உல­மாவின் கீழ் இயங்கும் கல்­விப்­பி­ரிவு, சமூக சேவைப் பிரிவு மற்றும் பத்வா பிரிவு போன்ற பல்­வே­று­பட்ட உப பிரி­வுகள் மூலம் முஸ்லிம் சமூகம் எண்­ணி­ல­டங்­காத சேவைகளை செய்து வருகின்றது.

ஜம்­இய்­யாவின் தேசிய அள­வி­லான சமூக வேலைத்­திட்­டங்கள் மூலம் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் உட்­பட முஸ்­லி­மல்­லா­த­வர்­களும் பய­ன­டைந்து வந்­தி­ருக்­கி­றார்கள்.

குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் ஐக்­கி­யத்­தையும் முஸ்லிமும், முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கு மத்­தியில் சக­வாழ்­வையும் கட்­டி­யெ­ழுப்பும் முயற்­சியில் ஜம்­இய்யா இந்த நாட்டில் செய்து வருகின்றது.

இவ் அமைப்பு சுயதீனமாக இயங்கும் ஒர் அமைப்பாகும். கட்சி, அரசியல் இன,மத பிரதேச வேறுபாடின்றி ஆன்மீகத்துறையில் தனது செயற்பாட்டினை செயற்படுத்தி வருகின்றது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.