சேபால் அமரசிங்க CID காவலில்

  Fayasa Fasil
By -
0

 

தலதா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

 குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் பெரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

 குருநாகல், வடகட பிரதேசத்தில் போலி தலதா மாளிகையை உருவாக்கி பௌத்த மதத்தையும் ஸ்ரீ தலதாவையும் அவமதிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டமை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 இதன்படி, பொலிஸ் மா அதிபர் இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்தார்.  இது தொடர்பான மேலதிக விபரங்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)