குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மனுவை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறித்த மனு நீதியரசர்களான  பிரியந்த ஜயவர்தன, எஸ்.துரைராஜா மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று (25) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


இதன்போது, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.