தஹம் பாடசாலை கல்வி முறைகள் இரண்டாக பிரிப்பு!! - O/l பரீட்சைக்கு 60 சதவீத  மதிப்பெண்கள்!!

▪️கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை - சமயப் பாடத்திற்கான  புள்ளிகளை இரண்டு பகுதிகளாகப் பிரித்து வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படுவதாக புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

▪️இதன்படி,தஹம் பாடசாலை கல்வி தொடர்பான கோட்பாடுகள் உள்ளடக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் ஒன்றினை கல்வி  அமைச்சு, மஹரகம தேசிய கல்வி நிறுவனம் மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியவை இணைந்து அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

▪️ இப்பாடத்திட்டத்தின் கீழ்,தஹம் பாடசாலை கல்வி  கோட்பாடு தொடர்பான  விடயங்களை பாடசாலைகளில் கற்பிப்பதாகவும், அத்தோடு சாதாரண தரப் பரீட்சையில் இக்கோட்பாடானது பரீட்சை புள்ளி வழங்களுக்கு அமைய 60% புள்ளிகளை பெறும் எனவும், மாணவர்கள் கற்கும் தஹம் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளைக் கவனத்தில் கொண்டு 40% புள்ளிகளும் வழங்கப்படும் எனவும்  அவர் தெரிவித்தார்.

▪️தஹம் பாடசாலை கல்வியை கட்டாயமாக்குவதில்  உள்ள சிக்கல்களைக் கவனத்தில் கொண்டு , சர்வ மத தலைவர்களினதும் ஒப்புதல்களுக்கு அமைவாகவே இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

▪️அதன்படி ,அனைத்து மத மாணவர்களும் இஸ்லாமிய அஹதியா பாடசாலை ,பௌத்த தஹம் பாடசாலை, இந்து அறநெறிப் பாடசாலை  ஆகிய கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என நம்புவதாகவும் புத்தசாசன அமைச்சின் செயலாளர்  சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.