அத்தனகல்ல பிரதேச சபை தேர்தலுக்கான வேட்புமனுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் அஷ்ரப் , NFGG கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நவ்சர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை வேட்பாளராக போட்டியிட்டு சில வாக்குகளால் ஆசனத்தை இழந்த சகோதரர் மக்புல் தாவூத் ஆகியோரும் நேற்று (19) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனுவில் கையெழுத்திட்டனர்.

 இவர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் நசார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இர்ஷான் ஆகியோருடன் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களும் கையெழுத்திட்டனர். 

இதுவேளை கஹட்டோவிட்ட வட்டாரத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் மாகாண சபை வேட்பாளர் ரிசான் வேட்பு மனுவில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.