உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுமா, இல்லையா? என்பது சம்பந்தமாக முக்கியமான தீர்மானம் ஒன்று எதிர்வரும் 08ஆம் திகதி எடுக்கப்படலாம் எனத் தெரிய வருகின்றது.
பாராளுமன்றம் 08ஆம் திகதி கூடும் பொழுது அரசாங்க பாராளுமன்றக் குழுவின் கூட்டம் 08ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அங்கே இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என மொட்டுக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தலுக்குத் தேவையான பணத்தை வழங்காத நிலையில் தேர்தலை நடாத்துவதில் தேர்தல் ஆணைக்குழு பெரும் சிக்கலை எதிர்நோக்கி இருக்கின்றது.
கடந்த வார அமைச்சரவையில் எடுத்த தீர்மானத்தின்படி அத்தியாவசிய செலவுகள் தொடர்பாக நிதியமைச்சு விடுத்துள்ள சுற்று நிருபம் காரணமாக சந்தேகம் எழுந்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சாகல காரியவசம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் அண்மையில் கூடி பிரதமரிடம் தேர்தலை நடாத்துவது பற்றி வலியுத்தி இருக்கிறார்கள். அவசரமாக ஒரு தெளிவான முடிவைப் பெற்றுத் தருமாறு கேட்டு இருக்கிறார்கள்.
எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கப் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் இது தொடர்பாக உறுதியான முடிவு ஒன்று தெரிவிக்க ப்படும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நடாத்துவது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்க உரிமை தேர்தல் ஆணைக் குழுவுக்கும் நீதிமன்றத்திற்கு மே இருக்கின்றது.
கட்சியின் சில அமைப்பாளர்கள் சிறிது காலத்துக்கு தேர்தலை ஒத்திப்போடுமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
இது இவ்வாறு இருக்க மொட்டுக் கட்சியினர் தேர்தல் தொடர்பாக பிரசாரங்களை அடுத்த வாரம் ஆரம்பிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.
கருத்துரையிடுக