157,230 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

ஜனவரி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 157,230 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது அதிகரிப்பைக் காட்டுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இதே காலத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 3,906 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.