பெரும்போக நெல் கொள்வனவு இன்று(15) முதல் ஆரம்பம்

பெரும்போக நெல் கொள்வனவு இன்று(15) முதல் ஆரம்பிக்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் மாவட்ட செயலாளர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதற்கமைய, 14 வீத அதிகபட்ச ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச தானிய உள்ளடக்கம் 9 வீதம் கொண்ட ஒரு கிலோ கிராம் நாட்டரிசி நெல் 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. 

14 வீதத்திற்கும் அதிகமான ஈரப்பதம் கொண்ட ஒரு கிலோ கிராம் நாட்டரிசி நெல்லை 88 ரூபாவிற்கு கொள்வனவு செய்யவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.