பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் லக்கி மார்வாட் மாவட்டத்தில் இருந்து தலைநகர் பெஷாவர் நோக்கி பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் சுமார் 30 பேர் பயணித்துள்ளனர்.
இந்த பேருந்து கோஹாட் மாவட்டத்தில் சிந்து நெடுஞ்சாலையில் உள்ள கோஹாட் சுரங்கப்பாதைக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த லொரி ஒன்று பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இதில் குறித்த பேருந்து அப்பளம்போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் பலர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த 29-ம் திகதி பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாலத்தில் இருந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக